பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2016

இனவாத செயற்பாட்டில் தெற்கில் மகிந்த ,வடக்கில் விக்கி

தெற்கில் மஹிந்தவும், வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இனவாத செயற்பாடுகளையே மேற்கொள்வதாக    மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில்  இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தெற்கில் மஹிந்தவின் இனவாத செயற்பாடுகளைப் பலப்படுத்தும் வகையில் விக்னேஸ்வரன் வடக்கிலிருந்து ‘சமஷ்டி’ என்ற விடயத்தைக் கொண்டு வருகின்றார்.

குறிப்பாக மஹிந்தவின் இனவாத அரசியல் பயணத்துக்கு தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் இருக்கின்றன. சிங்கள வாக்குகளை குறிவைத்தே மஹிந்த தற்பொழுது தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றார்.

எனினும், வட மாகாண மக்கள் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதை அவர் மறந்துவிட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் மஹிந்தவுக்கு ஆதரவாக வடக்கில் இருந்து வழங்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்