பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2016

படகுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா

யாழ் காரைநகரில் பகுதியில் படகுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. 

வடக்கிற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று படகுத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள துறைமுகங்களையும், நங்கூரமிடும் துறைமுகங்களையும் கட்டியெழுப்புவதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது.


இந் நிலையில், இதன் முதற் கட்டமாக காரைநகரில் 280 மில்லியன் ரூபாய் செலவில் உருவாகவுள்ள படகு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.