பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2016

வித்தியாவின் தாயாரை மிரட்டிய பெண்ணிற்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபரின்
விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று (29) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் எம்.எம்.ரியாழ் இவ் உத்தரவை பிறப்பித்தார்.
நீதிமன்றில் வைத்து வித்தியாவின் தாயாரை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரின் தாயார் மற்றும் அவரது உறவுக்கார பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் குறித்த சந்தேகநபரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் மற்றைய பெண்ணிற்கு விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.