பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2016

பணப்பெட்டியின் பாகம் கண்டுபிடிப்பு!




கடந்த திங்கள்கிழமை இரவு சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாய் பணத்தில் ரூபாய் 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சேலம்  - சென்னை ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரயிலில் இருந்த மரப்பெட்டியின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தகவல்.   விருத்தாசலம் - முசப்பூர் இடையே காட்டுப்பகுதியில் பணம் இருந்த மரப்பெட்டியின் ஒரு பாகத்தை போலீசார் கண்டெடுத்துள்ளதாக தகவல். கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஜார்க்கண்ட் செல்போன் எண்கள் இயங்கியதாகவும் தகவல்.

இதையடுத்து கொள்ளையர்களை தேடி டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படையினர் ஜார்க்கண்ட் விரைந்துள்ளனர்.