பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2016

சிறுமி மீது வன்புணர்வு சந்தேகநபர் விளக்கமறியலில்

கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது நிரம்பிய சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட விடுதி, சம்பவம் நடைபெற்ற மறுநாள் சீல் வைக்கப்பட்டதோடு, விடுதியின் உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.