பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2016

உயர்தர பரீட்சையில் நல்லாட்சி தொடர்பிலும் வினாக்கள்

இம்முறை இடம்பெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் அரசியல் விஞ்ஞான பாட வினாத்தாள்தொடர்பில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதற்கான காரணம் நல்லாட்சி தொடர்பில் இரண்டு வினாக்கள் தொடுக்கப்பட்டுள்ளமையே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் முதலாவது கேள்வியாக அரச பணியாளர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக நல்லாட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விடைய ளிக்குமாறு கோரப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றொரு கேள்வியாக தற்போதைய தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை பண்புகள் பற்றி விபரிக்குமாறு கோரப்பட்டி ருந்த தாகவும் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நல்லாட்சியின் கேள்வி பரீட்சைகள் திணைக்களத்தின் கேள்வியாக மாறியுள்ளமை தொடர்பில் மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.