பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2016

சபாநாயகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - கொடும்பாவி எரிப்பு(

சட்டப்பேரவையில் இன்று அதிமுகவினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சபாநாயகரின் உத்தரவை அடுத்து குண்டுகட்டாக ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வெளியேற்ற ப்பட்டனர்.  மேலும், திமுக உறுப்பினர்களுக்கு ஒரு வாரம் சஸ்பெண்ட் உத்தரவையும் பிறப்பித்தார் சபாநாயகர் தனபால்.

இதையடுத்து ஆவேசம் கொண்ட திமுகவினர் சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர், தாம்பரம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு,  சபாநாயகர் தனபாலை கண்டித்து கொடும்பாவி கொளுத்தி போராட்டம் நடத்தினர். 

இதே போல், காஞ்சிபுரம், தஞ்சாவூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தேனி, ஆண்டிப்பட்டி என தமிழகம் முழுவதும் கொடும்பாவி எரிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு கைதாகியும் வருகின்றனர்.