பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2016

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: சித்தராமையா சொல்கிறார்

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க முன் வராத நிலையில், தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை பெற்றிட உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்போவதாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அதன்படி நேற்று உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-
கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை குறைவாக பெய்துள்ளது. காவிரி படுகையில் மழை மிகவும் குறைவாகவே பெய்தது. தற்போது காவிரி படுகையில் மழை பெய்வதற்காக வானிலை அறிவிப்பும் சாதகமாக இல்லை.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பும் குறைவாகவே இருக்கிறது. அணையில் உள்ள தண்ணீரை குடிநீர் வினியோகத்துக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட இயலாது என மீண்டும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.