பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2016

என் மகனை திருத்தி தாருங்கள்! தந்தை பொலிசாரிடம் கோரிக்கை

நண்பர்களுடன் களவெடுத்துத் திரிந்த சிறுவனை திருத்தித்தருமாறு சிறுவனின் தந்தை பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று யாழ்.பொன்னாலை பிரதேசத்தில் இடம்பெற்று உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரத்தில் உள்ள கடை ஒன்றில் இடம் பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் குறித்த சிறுவனுக்கும் தொடர்பு உள்ளது என அறிந்த தந்தை மகனை வட்டுகோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்து மகனை திருத்தித் தருமாறு கோரியுள்ளார்.

மேலும் குறித்த சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கொழும்புத்துறையை சேர்ந்த சிறுவன் ஒருவரின் தலைமையில் இன்னும் சிலரைச் சேர்த்து இத் திருட்டு மேற்கொள்ளப்படடதாக தெரிய வருகிறது.