பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2016

மசாஜ் நிலையம் சுற்றி வளைப்பு ; சிக்கி கொண்ட பெண்கள்

மஹரகம-பிலியந்தல வீதியில் செயற்பட்டு வந்த மசாஜ் நிலையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கிருந்த 22 வயது தொடக்கம் 36 வயதுகளையுடைய 5 பெண்கள் உள்ளிட்ட அந்த மசாஜ் நிலையத்தின் முகாமையாளரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு செல்வோரிடம் அரை மணித்தியாலயத்திற்கு 2500 ரூபாய் அறவிடப்படுவதாகவும், மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த முறைபாடுகள் அமையவே மஹரகம பொலிஸார் சுற்றி வளைப்பினை மேற்கொண்டனர்.
இதேவேளை மசாஜ் நிலையம் என்ற பெயரில் வெள்ளவத்தையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி ஒன்றும் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது இங்கிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட முகாமையாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 24,27,30 மற்றும் 33 வயதானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.