பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2016

இலங்கை ஊடாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆட்களை அனுப்பியவர் கைது

கேரளாவில் இருந்து இலங்கையின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இளைஞர் யுவதிகளை அனுப்பிய
குற்றச்சாட்டின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கேரளாவில் வைத்து இவரை ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கேரளாவில் இருந்து 21 பேர் இலங்கையின் ஊடாக சிரியாவின் தீவிரவாதிகளுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் அவர்களில் 10 பேரை தீவிரவாதிகளுடன் இணைத்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த சந்தேகநபர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.