பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2016

கருணாஸ் பாட…ஜெயலலிதா ரசிக்க! சட்டசபையில் ருசிகரம்

தமிழக சட்டசபையில் எம்எல்ஏ-வும், நடிகருமான கருணாஸ் பாடலுக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் தாளம் போட ஜெயலலிதா ரசித்துக் கேட்டார்.

சட்டசபை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.
இதனை வரவேற்று கூட்டணி கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தி பேசினர்.
அப்போது திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் ஒருபடி மேலே போய் பாடலை பாடி அசத்தினார்.
தெய்வமே…தெய்வமே…நன்றி சொல்வேன் தெய்வமே, தேடினேன்.., தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை என்ற பாடலையும், நீங்க நல்லா இருக்கோணும்….நாடு முன்னேற…இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என பாடினர்.
இதற்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் தாளம் போட முதல்வர் ஜெயலலிதா சிரித்தபடியே ரசித்துக் கேட்டார்.