ஈஷா யோகா மையத்தில் இருந்து மகனை மீட்டுத் தரக் கோரி தந்தை முதல்வர் தனிப்பிரிவில் மனு
கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து தனது மகன் ரமேஷ் என்கிற பாலகுருவை மீட்டுத் தருமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் முதல் அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். தனது மகனை மூளைச் சலவை செய்து ஆசிரமத்தில் வைத்துள்ளதாகவும், ஊக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மாரியப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.