பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2016

காணாமற்போன மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி யொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காரைநகர் திக்கரையை சேர்ந்த சண்கமுராஜ் துவாரகா எனும் பதினாறு வயதான பாடசாலை மாணவியே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு சுமார் எட்டுமணியளவில் வீட்டில் இருந்த நிலையில் குறித்த சிறுமி காணமல் போயிருந்தார்.

இதனையடுத்து காணாமல் போன மாணவியை அவரது பெற்றோர் தேடிய நிலையில் இது தொடர்பாக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பெற்றோர் இனைந்து ஈடுபட்டிருந்தநிலையில்  மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் துரமளவில் உள்ள வளவொன்றுக்குள் உள்ள கிணற்றுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வளவிற்குள் தேங்காய் பறிப்பதற்காக வந்த சிலரே கிணற்றுள் சடலமிருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறவித்துள்ளனர்.

மாணவி எவ்வாறு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார் இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுள் போடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்