பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2016

நாமல் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ச இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது