பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2016

தெற்காசிய காற்பந்தாட்ட சம்பியன் கிண்ண போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிக்கை

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள   தெற்காசிய காற்பந்தாட்ட  சம்மேளன சாம்பி யன் கிண்ணப் போட்டிகளை இலங்கையில் நடாத்த  இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் கோரிக்கை விடவுள்ளது.இதற்கானமுடிவு நீர்கொழும்பில்  இடம்பெ ற்ற  சம்மேளன கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டம்  தெற்காசிய காற்பந்தாட்ட சம்மேளன அமைப்பின்  தலைவர் காஸி சலுயுதீன் (பங்களாதேஷ் )  தலைமையில் நடைபெற்றது.

 2019 இல் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளை  பாகிஸ்தானும் தனது நாட்டில்     நடாத்த கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சுற்றுப்போட்டியில் பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, 
பூட்டான், இந்தியா, மாலைதீவு , நேபாளம் ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன.
,23 ஆண்டுகளுக்கு முன்பு 1993இல் இந்தச் சுற்றுப் போட்டிகள் முதற் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 2005இல் இணைந்த ஆப்கானிஸ்தான் 2015இல் இந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டது