பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2016

27,603 மாணவர்கள் பல்கலை செல்ல வாய்ப்பு

கடந்த வருடத்தைவிட இம்முறை பல்கலைக்கழக அனுமதியில் 10 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்இம்முறை 27,603 மாணவ ர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மொஹான் டி சில்வா கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.