பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2016

கிளி.முரசுமோட்டை விபத்தில் இரு பெண்கள் படுகாயம்

கிளிநொச்சி, முரசுமோட்டை வீதியில் இன்று சனிக்கிழமை  இடம்பெற்ற வீதி விபத்தில் கண்ணிவெடியகற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த
நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
பரந்தனில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் புளி யம்பொக்கணையிலிருந்து பரந்தன் நோக்கி வந்த  காரும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்களும் படுகாயமடைந்துள்ளனர்.
உழவனூர் பகுதியைச் சேர்ந்த பா.நிதர்சினி (வயது 25), நா.ஜெகதீஸ்வரி (வயது 32) ஆகிய இருவருமே படுகாயங்களுக்குள்ளாகினர். மேலதிக விசாரணைகள் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்