பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2016

இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் - தமிழக வீரர் சாதனை



ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

மாரியப்பன் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்ல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.