பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2016

சபாநாயகா் ,கட்சித்தலைவர்களை சந்தித்தார் மூன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சபாநாயகர் கரு ஜெயசூரிய உட்பட அரசியல் தலைவர்கள் பலரை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இரண்டாம் நாளான இன்று அரசாங்கத்தின் முக்கிய அமைச்ச ர்க ளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ. நிமல் சிறி பால டி சில்வா. ரவூப் ஹக்கீம். லக்ஸ்மன் கிரியெல்ல.றிசாட் பதியுதீன். சரத் பொன்சேகா. பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க. மற்றும் நாடாளுமன்ற உறு ப்பினர் டக்ளஸ் தேவாநந்தா. ஆகியோரைச் சந்தித்தார்.

இதன்போது நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குறித்த சந்திப்பினையடுத்து பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்