பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2016

ஜெயலலிதா குணம் அடைந்தார் - வழக்கமான உணவை சாப்பிடுகிறார் மருத்துவமனை தகவல்



முதல்வர் ஜெயலலிதா குணம் அடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. காய்ச்சல் குறைந்து வழக்கமான உணவை சாப்பிடுகிறார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று மருத்துவமனை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறு என்று நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.  அங்கு அவருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனை வளாகத்திலும் , மருத்துவமனை முன்பாகவும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.  தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா நலம் பெற வேண்டி கோவில்களில் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.  இந்நிலையில், ஜெயலலிதா குணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.