பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2016

முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை

சிங்கள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்தகொலை தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.