பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2016

இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின் பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின்
பணமே 2013 மற்றும் 2014களில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின் பணமே 2013 மற்றும் 2014களில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2013ல் 37.5 மில்லியன் ரூபா பணம் வழங்கியுள்ள வடக்கு மாகாண சபையானது 2014இல் 27. 5 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய மாகாண சபை உருவாக்கத்தின் பின்பும் வட மாகாண சபையின் பணமே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட பணத்திற்கு வரவு செலவுத் திட்டத்தின் அனுமதியோ அல்லது அமைச்சரவை அங்கீகாரமோ கிடையாது எனவும் மேற்கொள்ளப்பட்ட செலவுகளிற்கான சான்றுகளும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த முன்பள்ளிகளை படையினர் நடாத்துவது கல்வியில் இராணுவத் தலையீடு மேற்படி முன்பள்ளிகளை இராணுவத்தினர் மீள ஒப்படைக்க வேண்டும் என பகிரங்கமாக குரல் எழுப்பி வந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் 30பேரும் இதுவரை எந்த தகவல்களும் வெளியிடவில்லை.
என்றார்.