பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2016

காவிரி பிரச்சனை தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து சென்னையில் தீ குளித்த விக்னேஷ் மரணம்

கர்நாடகா வன்முறையை கண்டித்து
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பேரணியில்,  மாணவர் அமைப்பை சார்ந்த விக்னேஷ் என்ற வாலிபர்
திடீர் என தலையில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு, கர்நாடகா ஒழிக என கூறி கொண்டு, தீ வைத்து கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியது. பேரணியில் வந்தவர்கள் வாலிபர் மீது எரிந்த தீயை அணைத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். 75 சதவீதம் தீ காயம் ஏற்பட்டிருந்தது.
தான் காவிரி பிரச்னைக்காக தீ குளிக்கபோவதாக முதல் நாளே கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இளைஞர் பரிதாபமாக இறந்து போனார்.
கர்நாடகாவிற்கு எதிராக வாலிபர் ஒருவர் தீ குளித்து இறந்த சம்பவத்தால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது