பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2016

முல்லை பாலிநகர் இராணுவமுகாமை அகற்றக்கோரி தீர்மானம்

முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்கு வழி செய்யுமாறு மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்றைய அபிவிருத்திகுழுக்கூட்ட த்தில் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

பாசாலைக்கு முன்பாக இராணுவ முகாம் காணப்படுவதனால் மாணவர்கள் இயல்பான முறையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் மகா வித்தியாலயம், பாலிநகர் ஆரம்பவித்தியா லயம் ஆகியவற்றுக்கு முன்பாக இராணுவ முகாம் காணப்படுகின்றது.

பாடசாலைக்கு முன்பாகவுள்ள பொதுக்காணி மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணி உள்ளடங்கலாக சுமார் எட்டு ஏக்கர் காணி இவ்வாறு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரங்களில் இராணுவத்தினர் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடு களில் ஈடுபடுவதனால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும், தாம் அச்சத்துடன் பாடசாலைக்கு செல்வதாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

பாடசாலைக்கு முன்னால் இராணுவமுகாம் காணப்படுவதனால் மாணவர்கள் மாலை நேர வகுப்புக்களுக்கு செல்லமுடியாத சூழல் காணப்படுவதுடன் தற்காலிகமாகவிருந்த இராணுவ முகாம் தற்போது பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாலிநகர் மகாவித்தியாலய அபிவிருத்தி குழு செயலாளர் தெரிவிக்கின்றார்.

மாணவர்கள் இயல்பான சூழலில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறித்த இராணுவ முகாம் தடையாகவுள்ளதாக தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி  முகாம் உள்ள காணிகள் மீண்டும் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் பாலிநகர் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் இராணுவ முகாம் காணப்படுகின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.