பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2016

இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-ஐ.நா

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அந்த அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
 
யுத்தக்குற்ற விசாரணைகளுக்காக இலங்கை அரசாங்கம் அமைக்கவுள்ள உள்ளக நீதிமன்ற விாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என்ற விடயத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் அழுத்தம் கொடுக்கவில்லை என  ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்திருந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பான் கீ மூனின் பிரதி ஊடகப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
 
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதி ஊடகப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்று நடத்திய வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை விடயத்தில் ஐ.நா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த பான் கீ மூனின் பேச்சாளர் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விடயத்தில் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், இதனை ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் அதன்  அனைத்து அறிக்கைகளிலும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி யு ள்ளதாகவும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.