பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2016

முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வெளியேற்றம்

முழங்காவில் பகுதியில் இருந்த துயிலுமில்ல 5 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து இராணுவம் வெளியேறும் நோக்கில் சுற்று வேலிகள் அகற்றப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முழங்காவில் பகுதியில் ஓர் சிறுவர் பூங்கா  அமைக்கும் நோக்கில் இதற்குப் பொருத்தமாக விளங்கும் குறித்த பகுதியினை விடுவிக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.
அதன் பிரகாரம் இவ் 5 ஏக்கர் நிலப்பகுதியை விடுவிக்கும் வகையில் இங்கு நிலை கொண்டுள்ள  படையினர் தாம் அமைத்த சுற்று வேலியிணை அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இப் பிரதேசம் இன்று அல்லது நாளை விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு இப்பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் ஓர் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வெளியேற்றம்