பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2016

கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்

கேலிச்சித்திரங்களினால்  பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்
பயணிக்கும் போது வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சையின்றி அவர் உயிரிழந்ததாகவும் அறியமுடிகின்றது.
சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அரசியல் மாற்றங்களை கேலிச்சித்திரங்களில் வெளிப்படுத்திய அஸ்வின் இலங்கை ஊடக அமைச்சினால் விருதினை பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கேலிச்சித்திரங்களினால் ஊடகப்பரப்பில் அண்மை காலங்களில் பிரபல்யம் பெற்றிருந்த அஸ்வின் முன்னதாக சுடரொளி மற்றும் வீரகேசரியில் பணியாற்றியிருந்ததுடன் இறுதி காலங்களினில் தினக்குரல் பத்திரிகையில் கேலிச்சித்திரவியளாலராக பணியாற்றியிருந்தார்.