பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2016

காவிரி நீருக்காக சென்னையில் மாணவர்கள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்

 
* காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைத்திடுக!

* உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி தமிழகத்திற்கு உரிமையான நீரை உடனே வழங்குக!



* அணைகளின் மீதான மாநில அரசின் உரிமைகளை காவிரி மேலாண்மை வரியத்திற்கு மாற்றிடுக!

* கர்நாடகத்தில் நடந்தேறிய வன்முறைச் சம்பவத்திற்கு உடனே நஷ்ட ஈடு வழங்குக!

* அப்பாவி தமிழர்களை தாக்கிய கன்னட இனவெறியர்களை உடனே கைது செய்திடுக!

* கர்நாடகத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிடுக!

* அணை பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்க!

- என்ற கோரிக்கைகளை முன் வைத்து பதிமுன்று மாணவர்கள் இன்று காலை 8 மணி முதல் சென்னையில் சாகும் வரை தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம் தொடங்கி உள்ளனர்.