பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2016

தீக்கிரையான கிளிநொச்சி பொதுச்சந்தையை பார்வையிட்ட கூட்டமைப்பினர்

கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று (திங்கட்கிழமை) தமிழ் தேசிய கூட்டமைப்பை
சேர்ந்த முக்கிய நாடளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
இதில், நாடளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறீதரன், உள்ளுராட்சி உதவி ஆனையாளர் பிரபாகரன், பிரதேச சபைச்செயலாளர் கம்சநாதன், வர்த்தக சங்கத்தலைவர் ஜேசு, வர்த்தக சங்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தீக்கிரையான கடைதொகுதிகளை பார்வையிட்ட பின், கருத்து தெரிவித்த நாளுமன்ற உறுப்பினார் மாவை சேனாதிராஜா, கூறுகையில்,
போரினால் பாதிக்கப்பட்டு பல அழிவுகளை சந்தித்த இந்த மக்கள் தங்களுடைய வியர்வைச்சிந்தியும் வங்கிகளில் கடனை பெற்றும் இங்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இவர்களுக்கு ஏற்பட்ட தீ விபத்து இவர்களை எவ்வாறு பாதிப்புள்ளாகி இருக்கும் என்பது எனக்;கும் தெரியும்.
சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் நானும் திரு சுமந்திரனும் பிரதமரோடு நேரடியாக இதைப்பற்றி கதைத்தோம். அவர் உடனடியாக எனக்கு மதிப்பீட்டை தாருங்கள் நான் நடவடிக்கை எடுப்தாக கூறினார்.
ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக இவ்விடயத்தை கையாண்டு நட்ட ஈட்டை பெற்று தருவதற்கான முழு முயற்சிகளையும் எடுப்போம்.
அதே வேளை நிரந்தர கட்டங்களை அமைத்தல் அதன் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும். என