பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2016


பிரபல எழுத்தாளர் குறமகள் கனடாவில் காலமானார்.
காங்கேசன்துறை - மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாக கொண்ட குறமகள் என எல்லோராலும் அறியப்பட்ட திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் கனடாவில் 15-09-2016 காலமானார்.
இலங்கையில் வீரகேசரிப் பத்திரிகையில் "மத்தாப்பு " எனும் பகுதியை எழுத்தால் தன் வயப்படுத்தியவர்களில் ஒருவர். பெண்ணியம் தொடர்பான பல ஆக்கங்களை வெளியிட்டவர்.
"ரோஜா" எனும் தமிழீழ விடுதலைப் போராளியை ஈன்றெடுத்த பெருமைக்குரிய வீரத்தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்