பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2016

செளந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத்தாக்கல்?


soundarya


ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு
ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு.
இந்நிலையில், சமீபத்தில் செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் செளந்தர்யா மற்றும் அஷ்வின் ஆகிய இருதரப்பும் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக செளந்தர்யா மற்றும் அஷ்வின் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை