பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2016

புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றுவது நல்லிணக்கமல்ல-கோட்டா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களினதும், இனவாத குழுக்களினதும் வேண்டுகோள்களை செவிமடுத்து அவைகளை நடைமுறை ப்படு த்துவது உண்மையான நல்லிணக்கமல்ல என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா பய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாறாக மாகாண சபையை அமைத்து அதற்கான தேர்தலை நடத்தி வடபகுதி மக்களுக்கு வாக்குரிமையை வழங்கியமை, முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தமை போன்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளே உண்மையான நல்லிணக்கத்திற்கான அடையாளம் என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.

கண்டிக்கு இன்றைய தினம் விஜயம் செய்த கோட்டாபய ராஜபக்ச மல்வத்துப்பீட மகாநாயக்க ரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதோடு அதன் பின்னர் ஸ்ரீ தலதா மாளிகை க்கும் விஜயம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ச, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

“மீண்டுமொரு போர் இடம்பெறாத படிக்கு சில காரணிகளைக் கண்டறிந்து கட்டுப்ப டுத்தியதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்திலும் பல விடயங்களை மேற்கொ ண்டிருந்தோம். யுத்த்தத்திற்குப் பின்னரான குறுகிய காலத்தில் சரணடைந்த 13 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் விதமாக புனர்வாழ்வளித்தோம். இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்களை மீள்குடியேற்றினோம். மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருந்த கண்ணிவெடிகளை அகற்ற 12 வருடங்கள் செல்லும் என சர்வதேசம் கூறிய போதிலும் அவற்றை எமது இராணுவம் மூன்றே வருடங்களில் அகற்றியது. 

30 வருடகாலமாக யாழ்.மாவட்டத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட வீடுகளில் பலவற்றை விடுவித்தோம். அதேபோல அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த சில காணி களைத் தவிர்ந்த ஏனையவற்றை எமது அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில்தான் விடுவித்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்கு முன்னைய அரசாங்கம் ஆயுதங்களை அவர்களது பாதுகாப்பிற்காக வழங்கியிருந்த்து. அவ ற்றை நாங்கள் மீளப்பெற்றோம்.  வருடக்கணக்காக வடக்கில் மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் எமது அரசாங்கத்தின்போதுதான் வடமாகாண சபை க்கான தேர்தலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டினார்.இவையெல்லாம் ஜனநாயகவாத தீர்மானங்கள் இல்லையா? நல்லிணக்க்க த்தை கட்டியெழுப்பிய நாங்கள் இனவாதக் குழுக்களுக்கு இடமளிக்கவில்லை. இனவாதக் குழுக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்ட புலம்பெயர் அமைப்புக்க ளது வேண்டுகோள்களை நிறைவேற்றுவது நல்லிணக்கம் அல்ல” – என்றார்.