பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2016

“எழுக தமிழ்” பேரணி ஆரம்பம்

எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில்  ஆரம்பமாகியது பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஒருசாராரும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்னொரு அணியினரும்  ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர்

.யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.  இவை பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் இரண்டும் ஒன்றோடு இணைந்து கே.கே.எஸ் வீதியினூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் நிறைவு பெறவுள்தாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இவ் ஆர்பாட்ட பேரணியில் இந்து கிறிஸ்தவ மதகுருமார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.