பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2016

சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர்
கைது செய்யப்பட்டனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களுடன் ரயில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவிரி நதிநீர் விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது