பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2016

பச்சை குத்துவதால் குருதிசார் நோய்கள்

டெட்டு எனப்படும் பச்சை  குத்துவதனால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மூன்று விதமாக இந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை பொதுச் சுகதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.

பச்சைக்குத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமே பெரும்பாலும் இந்த தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஒருவருக்கு பச்சைகுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் மற்றொருவருக்கும் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும் என அவர்   சுட்டிக்காட்டினார்.