பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2016

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,




சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், முன்னணி தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்த விவாதத்தின்போது மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ அருட்செல்வன் கருத்தை, விஜயகாந்த் ஏற்கவில்லை. 

இதையடுத்து அருட்செல்வன் தனது ஆதரவாளர்கள் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் த.லோ.பரமசிவம், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் வி.ஜெயபிரகாஷ் ஆகியோருடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.