பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2016

கிளி.புதுக்காட்டு சந்திக்கருகில் கோரவிபத்து ஐவர்பலி

கிளிநொச்சி பளை, புதுக்காடு சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த தனியார் பேருந்துடன், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த  மேலும் ஆறு பேர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பேருந்தின் சாரதியை கைது செய்துள்ள பளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.