பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2016

திடீர் தேர்தல் ஒன்றுக்கு தயாராகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

திடீர் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக தயா ராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்து ள்ளார்
.
நாடு முழுவதும் தேர்தல் மத்திய நிலையங்களை தெரிவு செய்தல் மற்றும் அவற்றை தயார்படுத்தும் நடவடிக்கைகள் என்பன கடந்த சில நாட்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பாடசாலை விடுமுறை முடிவடைந்தவுடன் தேர்தல் நடவடிக்கைகளுக்கான அதிகாரிகள் தொடர்பான கணக்கெடுப்புக்கள் நடாத்தப்பட்டு பெயர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டலின் பேரில் மாவட்ட தேர்தல் காரியாலங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்வரும் நாட்களில் நாட்டில் உள்ளுராட்சி சபைத் தேர்தல், மூன்று மாகாண சபை களு க்கான தேர்தல் மற்றும் புதிய அரசியல் யாப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு எ்னபன நடாத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த மூன்று தேர்தல்களில் எந்த தேர்தல் வந்தாலும் அவற்றை மிகச் சரியான முறையில் நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தற்பொழுது வரை நடவடிக்கைகளை ஆரம்பி த்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பு அவசரமாக நடாத்த வேண்டி ஏற்பட்டால், அதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு இது வரையில் செய்யதில்லையெனவும், அரசாங்கத்தின் கூட்டு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்