பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2016

கடந்த 28 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் எம்டிசிசியு என்கிற அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நீண்ட நாட்களாக படுக்கையில் படுத்துக்கிடக்கும் ஜெ.வுக்கு இந்த சிகிச்சைகள் புத்துணர்ச்சி ஊட்டினாலும், அவருக்கு ஏற்பட்டுள்ள படுக்கைப் புண் மருத்துவர்களை கவலையடைய செய்துள்ளது. அவருக்கு படுக்கைப் புண் ஏற்படாமல் இருக்க தண்ணீர் பெட், பவுடர் மசாஜ், உடம்பை கூலாக வைத்திருக்கும் ஊசிகள் போடப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவரை மாற்றி படுக்க வைத்து டாக்டர்கள் சிகிச்சை மேற்கொள்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதையெல்லாம் மீறி ஜெ.வின் உடலில் அங்கங்கே BED SOAR எனப்படும் படுக்கைப் புண்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சர்க்கரை நோயால் அவதிப்படும் ஜெ.வுக்கு ஏற்பட்டுள்ள இந்த படுக்கைப் புண்களை போக்க அதிநவீன ஸ்ப்ரே செய்யும் மருந்துகள் மூலம் படுக்கைப் புண்களை நீக்க டாக்டர்கள் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள்.