பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2016

புறா மூலம் மோடிக்கு வந்த எச்சரிக்கை கடிதம்


இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு வழியாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். படுகாயம் அடைந்த ராணுவ வீரர் ஒருவர் சில நாட்கள் கழித்து மரணம் அடைந்தார். இதனால் கோபம் அடைந்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாமை குண்டு வீசி தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் எல்லையருகே கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெறுவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இந்திய எல்லையில் இரண்டு பலூன்கள் பறந்து வந்தது. அதில் ‘பாகிஸ்தான் பழி வாங்கும்’ என்ற வாசகம் உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் பமியால் செக்டரின் சிம்பல் போஸ்டில் பாதுகாப்புப்படையினர் ஒரு புறா பறந்து வரக் கண்டனர். அந்த புறாவைப் பிடித்து பார்க்கையில் அதன் காலில் ஒரு கடிதம் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த கடிதம் பிரதமருக்கு எழுதப்பட்டிருந்தது. அதில் ‘‘மோடி ஜி, 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது இருந்த அதே மக்கள் நாங்கள் என்று கருத வேண்டாம். தற்போது ஒவ்வொருவரும் மற்றும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவை எதிர்த்து சண்டையிட தயாராக இருக்கிறோம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.