பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2016

ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு: பிரான்ஸ் தமிழச்சி மீது நாகை போலீசில் புகார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு பரப்பும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி
மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தொண்டர் கலையரசன் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.
முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக்கில் கடந்த 2-ந் தேதி முதல்வரின் உடல் நிலை குறித்து அவதூறு செய்திகளை பதிவு செய்துள்ளார்.
அவர் சுய விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறார். அவருடைய செயல் மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி வருகிறது. எனவே தமிழச்சி மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.