பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2016

இரு இலங்கையர் உட்பட மூவர் டுபாயில் கடலில் மூழ்கி உயிரிழப்பு

டுபாயில் இரண்டு இலங்கை  பிரஜைகள் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.டுபாயின் Umm Suqeim கடலில் வெள்ளிக்கிழமை நீராடச் சென்ற போதே இரு இலங்கை பிரஜைகளும் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் காப்பாற்றும் முயற்சி தோல்வியில் நிறைவ டைந்துள்ளது.கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் நீராடச் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்ப ட்டிருந்ததாகவும்  இந்த எச்சரிக்கைகளை மீறி இவர்கள் நீராடச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.