பக்கங்கள்

பக்கங்கள்

12 அக்., 2016

பண மோசடி செய்ததாக வழக்கு : புகார் தவறானது என தோனியின் மனைவி மறுப்பு



இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்சி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக 3 பிரிவுகளில் டெல்லி காவல்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 



சாக்சி, ரகிதி எம்எஸ்டி என்ற நிறுவனம் தொடங்கியதாகவும், டானிஸ் என்ற நிறுவத்துககு ஒப்பந்தமாக ரூபாய் 11 கோடி தருவதாக பேசப்பட்டதாகவும், ஆனால் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை ரூபாய் இரண்டு கோடியே 25 லட்சம் தான் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட டானிஸ் நிறுவனம் டெல்லியில் உள்ள குர்கிராம் காவல்நிலையத்தில் அந்நிறுவனத்தின் மீது புகார் செய்துள்ளது. இதையடுத்தே சாக்கி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஆனால் அந்த நிறுவன பங்குதாரர் பொறுப்பில் இருந்து ஓராண்டுக்கு முன்பே விலகிவிட்டதாக சாக்சி தெரிவித்துள்ளார்.