பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2016

நியூஸிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி
மொஹாலியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸி., அணி சிறப்பாக விளையாடி 285 ரன்கள் குவித்தது. பின்னர், 286 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, கேப்டன் தோனி கோலி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 151 ரன்கள் பார்ட்னர் ஷிப் எடுத்தது.

தோனி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  தோனி இந்த போட்டியின் போது உலக அளவில் மிக குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில் 9 ஆயிரம் ரன்கள் கடந்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அதே போல், ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் முறியடித்தார். சிறப்பாக விளையாடிய கோலி சதம் அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் இது அவரது 26-ஆவது சதமாகும். இந்தியா 48.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.