பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2016

ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் : 
அப்பல்லோ அறிக்கை


நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,  முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர் குழு ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது.  இதயம், நுரையீரல், நீரிழிவு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகி ன்றனர்.  பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.   முதல்வருக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.