பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2016

ஐ.நா.க்கான அறிக்ககையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிபாரிசுகள்

சிறுபான்மையினரது உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வகையில்
சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்படும் என ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் உறுதியளித்ததாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களை இன்று (வெள்ளிக்கிழமை) அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பை தொடர்ந்து, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன்போது நாட்டில் உள்ள மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகள், படையினருடைய இருப்பிடங்கள் மக்களது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் விதம், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வேலையில்லாப் பிரச்சினைகள் மற்றும் விதவைகள் தொடர்பாகவும் இதன்போது ஐ.நா. அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.