பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2016

சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரியாத்தில் இடம்பெற்ற ஒரு கொலை குற்றம் நிரூபனமான நிலையில் இளவரசர்
துருக்கி பின் சவுத் அல்-கபீருக்கு இவ்வாறு தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு தகராறில் இளவரசர் நண்பரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறிப்பிட்ட இளவரசர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் எனவும் உள்துறை அமைச்சக அறிக்கை விடுத்துள்ளது.
சவூதியில் இந்த ஆண்டு மரண தண்டனை அளிக்கப்பட்ட 134 வது நபர் இவர் ஆவார்.
அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது அரிதான ஒன்றாகும்.

1977ஆம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் மரண தண்டனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதுகேபினட்டில் '