பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2016

அமெரிக்கத் தூதுவர்-சம்பந்தன் சந்தித்து பேச்சு

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.

இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

எனினும், இரா.சம்பந்தனை சந்திப்பதும், அவரது கருத்துக்களைச் செவிமடுப்பதும் எப்போதும் தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.