பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2016

இரவில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசு

கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து திங்கள்கிழமை இரவு முதல் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்க கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பெங்களுர், மைசூர் உள்ளிட்ட நகர மக்களின் குடிநீர் தேவைக்கே காவிரி நதி நீரைப் பபிரதானமாக பயன்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பயிர்களைக் காப்பாற்ற ஓரளவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து திங்கள்கிழமை இரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 6,800 கன அடியும், கபினி அணையில் இருந்து 3,500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.